உலகம்
நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கிய கூகுள்
கூகுள் நிறுவனமானது நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகியவை எதிர்காலத்தில் 12,000 பேரை, அதாவது 6% ஊழியர்களை நீக்க இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தன.
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் வன்பொருள், குரல் பதிவு உதவியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முதலீட்டாளர்களை ஈர்க்க கடந்த ஆண்டு 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தமையினால் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 187% வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.