24 65a12b7017b3d
உலகம்செய்திகள்

நெருங்கிய நண்பரை கரம் பிடித்தார் பிரபல OpenAI நிறுவனத்தின் CEO

Share

ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

OpenAI நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். இவர் அண்மையில் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை மோதிரம் மாற்றி ஆல்ட்மேன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஹவாயில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தற்போது, திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் Oliver Mulherin. இவர் பொறியியல் படிப்பு முடித்துள்ளார். Meta, Broadwing, SPARK Neuro மற்றும் IOTA Foundation ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய இவர், தற்போது ஐஓடி எனும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.

திருமண புகைப்படங்களை Oliver Mulherin தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், என் சிறந்த நண்பரையும், என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...