tamilni 206 scaled
இலங்கைசெய்திகள்

வரி அடையாள எண் தொடர்பில் தகவல்

Share

எதிர்வரும் நாட்களில் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் போது வரி அடையாள எண்ணையும் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அனைத்து மக்களும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் போது அவர்களுக்கு வரி இலக்கம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தரவுகள் கணனி மயமாக்கப்பட்டு வரி தொடர்பான செயற்பாடுகள் வலுப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் நடப்புக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கும் போதும், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி பெறும்போதும், வாகன பதிவின் போதும், அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கும் போதும், நில உரிமை பதிவின் போதும் வரி அடையாள எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...