tamilnih 64 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண்

Share

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலை செய்ய சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெளிநாடு சென்ற மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

26 வயதான மதுபாஷினி குமாரி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளார்.

வெளிநாட்டில் சில நாட்கள் கழித்து தனது உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி தான் வேலை செய்யும் வீட்டில் சாரதி பிரச்சினை செய்வதாக கூறியுள்ளார். மேலும், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை தொலைபேசியில் அழைப்பதாகவும் வீட்டில் வேலை அதிகம் எனவும் அதிக நேரம் பேச முடியாது எனவும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் தங்கிய முதல் மாதத்தில் 78,000 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும், சில மாதங்களுக்குப் பிறகு அது குறைக்கப்பட்டதாகவும் கூறினார். இரண்டாவது மாதத்தில் 53,000 மற்றும் பின்னர் 20,000 கடந்த மாதம் 10,000 ஆக குறைக்கப்பட்டது.

ஒரேயடியாக பணம் தருவதில்லை என்று அந்த பெண் கணவரிடம் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி தனது கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்த நிலையில், அதன் பின்னரும் அவருக்கு அழைப்பு வராததால், உறவினர்கள் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவித்துள்ளனர்.

அங்கு, ஒரு வாரத்திற்கு முன்பு எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...