புதிய புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால் வீடுகளைக் கட்டுவது சாத்தியமேயில்லை: புதிய அறிவிப்பு
உலகம்செய்திகள்

தற்காலிக குடியிருப்பு அனுமதிகளை தடுத்தால்… கனடாவின் நிலைமை மோசமாகும்

Share

தற்காலிக குடியிருப்பு அனுமதி திட்டங்களின் கீழ் கனடாவுக்கு வருபவர்களைத் தடுத்தால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகும் என நிதி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் வருகையால் கனடாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளது. ஆகவே, அத்தகைய நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டு வருகிறது.

ஆனால் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை (non-permanent resident) பெடரல் அரசு கட்டுப்படுத்தினால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகும் என Desjardins என்னும் கனேடிய நிதி அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

நேற்று, அதாவது, புதன்கிழமை அந்த அமைப்பின் மூத்த இயக்குநரான Randall Bartlett வெளியிட்ட அந்த அறிக்கை, பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருப்பதால் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை இயல்பாகவே குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. தற்போதைய கணிப்புகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2024 இல், 0.1 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியிருக்கும் நிலையில், நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதியை முற்றிலுமாக நிறுத்தும் வகையில் புதிய கொள்கைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தினால், 2024 இல், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 0.7 சதவிகிதமாக சுருங்கக்கூடும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், அத்தகைய நடவடிக்கை, நாடு மந்த நிலையிலிருந்து மீண்டெழுவதையும் பாதிக்கும் என்றும், அதன் பின்னரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதற்கு அது வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆக, கனடா இப்போதை விட, நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதியை இரட்டிப்பாக்கினால், இந்த ஆண்டில், கனடாவின் பொருளாதாரம் ஒரு சதவிகிதம் வளர்ச்சியடையும் என்றும், வரவிருக்கும் ஆண்டுகளில் மிகவும் வலுவான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்றும் Randall Bartlett கூறுகிறார்.

அதே நேரத்தில், தொடர்ந்து நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதியை அதிகரித்துக்கொண்டே இருந்தால், அதனால் சில பாதிப்புகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை என்கிறது அந்த அறிக்கை. அதாவது, நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதிகளை அதிகப்படுத்திக்கொண்டே சென்றால், அது மக்களுக்கு தங்க வீடு கிடைக்கும் நிலைமையை பாதிக்கலாம் என்றும், அதனால் பணவீக்கம் மோசமாகலாம் என்றும், அதனால், கனடா வங்கி தனது வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்த்தியே வைத்திருக்கும் கட்டாயம் ஏற்படாம் என்றும் கூறுகிறது Randall Bartlett வெளியிட்டுள்ள அறிக்கை.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...