tamilni 190 scaled
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Share

திருகோணமலையை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே நேற்றிரவு (10.01.2024) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிள், மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில், யுக்திய திட்டத்திற்கு அமைவாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வில்கம் விகாரை பகுதியில் வைத்து சோதனையிடப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...