tamilni 150 scaled
இலங்கைசெய்திகள்

கெஹலியவுக்கு எதிராக கொழும்பில் ஆர்பாட்டம்

Share

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்லவை உடனடியாக கைதுசெய்ய கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று(09.01.2023) இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் நாட்டில் சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு அமைச்சர் என்ற வகையில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க தவறியதாகவும், இதன் காரணமாக அவர் உடனடியாக கைதுசெய்ப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நாட்டிற்கு கொண்டுவரபட்ட சட்டவிரோத மருந்து இறக்குமதியால் பல உயிர்கள் பலியானதாகவும், இதற்கு கெஹலிய ரம்புகவெல்லவே பொறுப்புக்கூறவேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டிருந்ததோடு நீர்த்தாரை பிரயோக வாகனமும் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...