tamilni 144 scaled
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் யுக்திய

Share

இலங்கை பொலிஸார் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

தேடல் நடவடிக்கைகளின் போது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை பற்றிய அறிக்கைகள் கிடைத்துள்ளன.

எனவே இது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஆணைக்குழு கோரியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையின்போது, 2023, டிசம்பர் 17 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான இரண்டு வார காலப்பகுதியில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் இதன்போது, சித்திரவதை, மனிதாபிமானமற்ற நடத்தை, தன்னிச்சையான கைதுகள் மற்றும் நடவடிக்கையுடன் தொடர்புடைய தடுப்புக்காவல்கள் போன்ற பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஏனவே இந்த நடவடிக்கைகள், ‘நியாயம்’ என்று பொருள்படும் ‘யுக்திய’ என்ற தலைப்பிற்கு முரணானது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர்களை எல்லா நேரங்களிலும் கண்ணியமாக நடத்துவதன் மூலம் இந்த உரிமையை நிலைநிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

அத்துடன் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றின்படி, சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்ட போதிலும் தொடர்ந்தும் சம்பந்தப்பட்டவர்கள் பதவியில் உள்ளனர் என்பதையும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...