tamilnih 34 scaled
இலங்கைசெய்திகள்

தலைவர் பிரபாகரனை போல் தமிழ் தேசியத்தை உலகறிய செய்வேன்

Share

தலைவர் பிரபாகரன் ஆங்கில மொழியோ, சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைவர்களுக்கு ஆங்கில மொழி புலமையும் சட்ட அறிவும் அவசியமென்றால் தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் காலத்தில் நாங்கள் விடுதலைபெற்றிருக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தலைவர் பிரபாகரன் எவ்வாறு தன்னுடைய ஆங்கில மொழியோ சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார்.

ஆனால் எத்தனையோ தலைவர்கள் தேடி வந்து பேசிய வரலாறை நாங்கள் திரும்பிப் பார்க்கின்றோம். ஆகவே அவற்றை நாங்கள் விமர்சிக்க தேவையில்லை.

அது மொழி என்பது ஒரு கொடை சட்டம் என்பது கிடைக்கின்ற கல்வி ரீதியான ஆற்றல் அவை இருக்கட்டும்.

ஆனால் தலைமைத்துவத்திற்கு அவர்களுடைய தைரியமும் மக்களை வழி நடத்துகின்ற பற்றும் இனம் மீதான சிந்தனையும் இருந்தால் அது ஒரு நல்ல தலைமைத்துவமாக வளரும்.

யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஐயாவும் தலைவராக வரக்கூடிய பூரண தகுதி கொண்டவர். என்னுடைய சக வேட்பாளர் சுமந்திரனும் தலைவராக வருவதற்குரிய பூரண தகுதியை கொண்டவர்.

ஆனால் இதை விட விண்ணப்பிக்காதவர்கள் வெளியிலே கட்சியை நடத்தக்கூடிய தலைவர்களும் இருக்கின்றார்கள்.

நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் என்னாலும் நடத்த முடியும். நான் இதனை நடத்திச் செல்வதற்கு என்னுடைய விருப்பத்தை தெரிவிக்கின்ற விண்ணப்பத்தை கொடுத்திருக்கின்றேன்.

ஆகவே என்னுடைய வழி வரைபடம் நான் ஒரு மக்கள் புரட்சியை ஏற்படுத்தி புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற தமிழ் தரப்புகளையும் ஒன்றிணைத்து, நிலத்திலே இருக்கின்ற எமது மக்களையும் புலம்பெயர் மக்களையும் ஒன்றாக ஒரு ராஜதந்திர உறவுகளோடு உலக நாடுகளில் குறிப்பாக பிராந்திய சக்தி சர்வதேச சக்திகளின் உடைய அனுசரணையோடு எங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அடைவதற்கான பாதையை எவ்வாறு உருவாக வைப்பது என்பதற்கான ஒரு வழி வரவிடத்தை கொண்டு என்னுடைய பயணத்தை தொடர நான் விரும்புகின்றேன்” என்றார்.

Share
தொடர்புடையது
23858849 newproject 2025 12 28t112541304
செய்திகள்உலகம்

இனி வீட்டு வேலைகளுக்கு ‘ஹுமாயுனோய்டு’ ரோபோக்கள்: சிலிக்கான் வேலியில் தீவிரமடையும் தயாரிப்புப் பணிகள்!

வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வதற்கான மனித ரொபோக்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் சிலிக்கன் வெலி தொழில்நுட்ப...

24632725 china
செய்திகள்உலகம்

சீனாவில் களைகட்டிய உலக இந்தி தினம்: ஷாங்காய் இந்தியத் தூதரகத்தில் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!

உலக இந்தி தினத்தை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசேட கொண்டாட்டங்கள்...

kalvi L 260112092401000000
செய்திகள்உலகம்

தட்சசீலத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான கால நாணயங்கள் கண்டெடுப்பு: உலகளாவிய வணிக மையம் என்பது உறுதி!

பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் (Taxila) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷானப்...

26 69631f5fb34d5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தீவிரமடையும் வைரஸ் காய்ச்சல்: கொழும்பில் சிக்குன்குனியா; நாடு முழுவதும் டெங்கு அச்சம்!

இலங்கையில் தற்போது பல்வேறு வகையான வைரஸ் நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின்...