tamilnaadi 2 scaled
உலகம்செய்திகள்

நியூசிலாந்து நாடாளுமன்றில் பழங்குடி இளம் பெண் எம்.பியின் அதிர வைத்த வெற்றி முழக்கம்

Share

நியூசிலாந்து மெளரி பழங்குடி பெண் எம்.பி பாரம்பரிய வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் முழங்கிய காணொளி உலகம் முழுவதும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

21 வயது இளம் பெண் எம்.பியான இவரது முழக்கத்தை சக எம்.பிக்கள் மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் கேட்டுக் கொண்டு இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹன்ட்லி பகுதியை சேர்ந்த மையி கிளார்க் நியூசிலாந்து நாட்டின் மெளரி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.

170 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் 21 வயது இளம் பெண் எம்.பியாக மையி கிளார்க் கடந்த அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தில் மெளரி பழங்குடியினர் தங்களது போர், வெற்றி, ஒற்றுமை மற்றும் இன குழுவின் பெருமை ஆகியவற்றை தங்களது சொல்லால் பயன்படுத்தும் முறையை கொண்டுள்ளனர்.

அதன்படி, அந்த பழங்குடியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வயது இளம் பெண் எம்.பியான மைபி கிளார்க் தனது வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் பேசி அதிர வைத்துள்ளார்.

இந்த முழக்கத்தை கேட்ட சக எம்.பிக்கள் அதை மகிழ்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

மைபி கிளார்க் உணர்ச்சிவசமாக பேசிய அந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகின்றது.

Share
தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் கைது!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...