உலகம்
இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென அச்சம்
இந்தோனேசியாவின் தீவான ஜாவாவில் இன்று (05) இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தோனேசியாவின் தீவான ஜாவாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பல பெட்டிகள் கவிழ்ந்துள்ளது.
விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் குறைந்தது 28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற ரயிலானது, சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் ரயில் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த ரயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பயணிகள் ரயிலில் 106 பயணிகளும், துரங்காவில் 54 பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.