உலகம்செய்திகள்

நடிகர் வடிவேலு பாணியில் திரும்ப திரும்ப பொய் சொல்லும் மு.க.ஸ்டாலின்: கிண்டலடிக்கும் அண்ணாமலை

Share

நடிகர் வடிவேலுவை போல தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திரும்பத் திரும்ப பொய் பேசுகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்துள்ளார். இதனால், திருச்சியை சுத்தம் செய்யும் பணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “திருச்சிக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் விதமாகவும், அவரை வரவேற்கும் விதமாகவும் பாஜகவினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.25 கோடி நஷ்ட ஈடு வேண்டும் .. ஒப்பந்தம் மீறியதால் முன்னாள் ஊழியர் மீது வழக்கு தொடர்ந்த Wipro நிறுவனம்
ரூ.25 கோடி நஷ்ட ஈடு வேண்டும் .. ஒப்பந்தம் மீறியதால் முன்னாள் ஊழியர் மீது வழக்கு தொடர்ந்த Wipro நிறுவனம்
தமிழக அரசு சுத்தம் என்ற கொள்கையை கடைபிடிப்பதே இல்லை. அதனால் நாம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். அரசு அதனை மேம்போக்காக செயல்படுத்துகிறது” என்றார்.

மேலும் பேசிய அவர், “நடிகர் வடிவேல் பாணியில் பெருமழையை எதிர்பார்க்கவில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்ப ஒரே பொய்யை சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி பணிக்காக இந்திய அரசு ஒதுக்கிய தொகையை இவர்கள் முறையாக பயன்படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் தூத்துக்குடி மாவட்டம் இந்த அளவுக்கு வெள்ள பாதிப்புகளை சந்தித்திருக்காது. எத்தனை வெள்ளம் வந்தாலும் இவர்கள் திருந்த போவதில்லை. இவர்களை மக்கள் தான் திருத்த வேண்டும்” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...