tamilni 37 scaled
உலகம்செய்திகள்

”சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்”- புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

Share

சினிமாவில் மட்டுமல்ல விஜயகாந்த் அரசியலிலும் கேப்டனாக இருந்து வந்திருக்கிறார் என பிரதமர் மோடி புகழ்ந்து கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எ.வ.வேலு, திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய பிரதமர் மோடி, கடந்து வருடம் டிச.28-ம் திகதி மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

பிரதமர் மோடி கூறியதாவது…
”கடந்த 2023வது வருடத்தின் கடைசி சில வாரங்கள் கடினமானதாக இருந்திருக்கிறது. கனமழை மக்களைக் கடுமையாக பாதித்தது.

மேலும், சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை இழந்திருக்கிறோம். சினிமாவில் மட்டுமல்ல அவர் அரசியலிலும் கேப்டனாக இருந்து வந்திருக்கிறார். திரைப்படங்களில் அவரது செயல்பாடு காரணமாக மக்களின் இடத்தில் தனி இடம் பிடித்தார். அரசியல்வாதியாகவும் தேசிய நலனுக்கு அவர் முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார். அவருக்கு என் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன். அவரது குடும்பத்திற்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...