tamilni 20 scaled
சினிமாபொழுதுபோக்கு

இறுதி வார நாமினேஷனில் சிக்கியுள்ள போட்டியாளர்கள்

Share

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சண்டை, காதல் என வழக்கமாக பிக்பாஸ் கிளப்பும் அந்த சர்ச்சைகளையும் இந்த சீசனும் கிளப்பியது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், போட்டியாளர்கள் தற்போது கவனமாக விளையாடி வருகின்றனர்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி ஒளிப்பரப்பாகி வருகிற்து. 90 நாட்களை வெற்றிகரமாக கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான போட்டிகள் நடந்தன. இதில் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மாவை தவிர மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இந்த டாஸ்க்கை தங்களுக்குள்ளே இரண்டு குரூப்புகளாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடினர். அதில் மாயா, பூர்ணிமா, நிக்சன், விசித்ரா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் ஒரு குழுவாக பிரிந்து விளையாடினர். அதே போல் தினேஷ், விஷ்ணு, ரவீனா, மணி உள்ளிட்டோர் ஒரு குரூப்பாக பிரிந்தும் விளையாடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் ரவீனா, நிக்சன் இருவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து மீதமுள்ள 7 பேர் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இதனிடையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் பிற போட்டியாளர்களை காரணங்களுடன் நாமினேட் செய்த நிலையில், திடீர் ட்விஸ்டாக இந்த வாரம் வீட்டில் உள்ள அனைவருமே நாமினேட் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் பிக்பாஸ். அனேகமாக இந்த வாரம் தான் கடைசி நாமினேஷனாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்த நிலையில், அதிரடி ட்விஸ்டாக அனைவரையும் பிக்பாஸ் நாமினேட் செய்துள்ளது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இதில் இந்த வாரம் யார் வெளியேற்றப்பட்டு, யார் யார் இறுதி போட்டிக்குள் நுழைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையில் எல்லா சீசனிலும் நடக்கும் பணப்பெட்டி டாஸ்க் இந்த வாரம் சீசன் 7ல் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அனேகமாக விசித்ரா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற வாய்ப்புள்ளதாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பேசி வருகின்றனர். மறுபுறம் அர்ச்சனா டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளதாக ஹவுஸ்மேட் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
article l 20251131313035347033000 xl
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் சமியுக்தாவுக்கு இரண்டாவது திருமணம்: சிஎஸ்கே வீரருமான அனிருத்தா ஸ்ரீகாந்தை மணக்கவிருப்பதாக தகவல்!

‘பிக் பாஸ் தமிழ்’ நான்காவது சீசனில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமான நடிகை சமியுக்தா, தனது இரண்டாவது...

1851465 rajinikanth
சினிமாபொழுதுபோக்கு

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது: 50 ஆண்டு கால சினிமாச் சேவைக்காக கௌரவம்!

இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International...

featureabhinay 1762758724
சினிமாபொழுதுபோக்கு

துள்ளுவதோ இளமை பட நடிகர் அபிநய் காலமானார்: உடல்நலக் குறைவால் மறைவு – திரையுலகினர் இரங்கல்!

பிரபலத் தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகர் அபிநய் (Abhinay) இன்று (நவம்பர் 11) காலமானதாக...

image d3b04ad29c
பொழுதுபோக்குசினிமா

நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் நிடிமொரு காதலா?: புதிய வர்த்தக வெளியீட்டு விழாவில் நெருக்கமான புகைப்படம் வைரல்!

நடிகை சமந்தா பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்த...