tamilni 465 scaled
இலங்கைசெய்திகள்

14 வயது சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்ற இளைஞன்

Share

14 வயது சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்ற இளைஞன்

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்ற இளைஞன் தாக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா, சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியை நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் காதலித்து திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த இளைஞர் சிறுமியை நேற்று(26) குருநாகல் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் இருவரையும் விசாரணை செய்தபோது சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சிறுமியின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதைடுத்து இளைஞனை தாக்கியுள்ளனர்.

இதேவேளை பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இளைஞரை கைது செய்து சட்ட வைத்திய அதிகாரியிடம் சோதனைக்காக கொண்டு சென்ற போது இளைஞருக்கு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 14 வயது சிறுமியை சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் இளைஞரை கைது செய்து பொலிஸ் கண்காணிப்பில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...