இலங்கை
நாசாவினால் நடத்தப்பட்ட போட்டியில் சாதனை படைத்த இலங்கை சிறுவன்
நாசாவினால் நடத்தப்பட்ட போட்டியில் சாதனை படைத்த இலங்கை சிறுவன்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தரம் இரண்டு மாணவன் முதல் பரிசு வென்றுள்ளார்.
அனுராதபுரம் திரப்பன பகுதியைச் சேர்ந்த தஹாம் லோஷித பிரேமரட்ன என்ற சிறுவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த சிறுவன் வரைந்து அனுப்பிய ஓவியம் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், நாசாவின் அடுத்த ஆண்டுக்கான நாட்காட்டியிலும் இடம்பிடித்துள்ளது.
விண்வெளியில் வாழ்தல் மற்றும் பணி செய்தல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற போட்டியில் லோஷித வெற்றியீட்டியுள்ளார்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியின் ஜூலை மாத புகைப்படமாக இந்த சிறுவனின் சித்திரம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.