tamilni 279 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

Share

யாழில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று(16.12.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் டெங்கு நோய்க்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர். இன்றும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் போதனா வைத்தியசாலைக்கு அப்பால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளிகளை பராமரிக்க விடுதிகள் காணப்படுகிறது.

அதேவேளை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை, கோப்பாய் பிரதேச வைத்தியசாலை, சண்டிலிப்பாய் பிரதேச வைத்தியசாலைகளிலும் டெங்கு நோய் அறிகுறி தொடர்பிலான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பொது வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா,

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து தலைவலி, வாந்தி, வயிற்றோட்டம், மூட்டு நோ போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடுவது நல்லது என கூறியுள்ளார்.

தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது என தெரிவித்த பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன், காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனையை பெற்று என்ன வகையான தொற்று என்பதை கண்டறிந்து சிகிச்சையை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...