tamilni 170 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மரணித்த மனிதாபிமானம்!

Share

இலங்கையில் மரணித்த மனிதாபிமானம்!

பூகொட பிரதேசத்தில் லொறியுடன் மோதி காயமடைந்த 83 வயதுடைய முதியவரை சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி , இடைநடுவே கைவிட்டு சென்ற லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில், பூகொட பாப்பிலியாவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியால் வீதியில் விட்டுச்செல்லப்பட்ட முதியவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பூகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது 83 வயதுடைய முதியவர் மீது லொறி மோதியதுடன், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி லொறி சாரதி அவரை லொறியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இருப்பினும், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் காயமடைந்த முதியவரை இறக்கிவிட்டு லொறியின் சாரதி தப்பியோடிய விதம் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இதன்படி, தப்பியோடிய நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பூகொட பொலிஸார் ஆரம்பித்த நிலையில், பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பூகொட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
12 20
செய்திகள்உலகம்

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன்: எத்தகைய உதவியையும் வழங்கத் தயார் – ஈரான் தூதுவர்!

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில், இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும்,...

11 21
செய்திகள்அரசியல்இலங்கை

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் அடிப்படை உரிமை மனு: செப்டம்பர் 25-இல் பரிசீலனை!

அரசு புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத்...

10 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரும்புக் கம்பி துளைத்த நபர்: பதுளை வைத்தியசாலையில் உயிர் காக்கப்பட்ட அதிசயம்!

பதுளை போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Badulla) வைத்தியக் குழுவினர், வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக...

09 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வேண்டுகோள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வலுசக்தி விநியோகச்...