tamilni 60 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவிற்கு புலம்பெயர காத்திருப்போருக்கு அதிர்ச்சி

Share

பிரித்தானியாவிற்கு புலம்பெயர காத்திருப்போருக்கு அதிர்ச்சி

பிரித்தானிய அரசாங்கம் புலம்பெயர்வைக் குறைப்பதற்கான கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி 2022 இல் இங்கிலாந்திற்கு நிகர இடம்பெயர்வு 7,45,000 ஆக உயர்ந்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவிக்கையில்,

குடியேற்றம் மிக அதிகமாக உள்ளது. இன்று நாம் அதைக் குறைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த நடவடிக்கைகள் இங்கிலாந்துக்கு நன்மையளிப்பதோடு பிரித்தானிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புலம்பெயர்தலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தனது உத்தியோகப்பூர்வ x தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி வெளிநாட்டுப் பராமரிப்புப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வர முடியாது.

ஒரு தொழிலாளர் விசா விண்ணப்பத்திற்கான வரம்பு £26,200 இலிருந்து £38,700 ஆக உயர்வடைந்துள்ளது.

குடும்ப விசாவிற்கான குறைந்தபட்ச விண்ணப்பத்திற்கான வரம்பு £18,600 இலிருந்து £38,700 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் “மக்கள் நிதி ரீதியாக ஆதரவளிக்கக்கூடியவர்களை மட்டுமே பிரித்தானியாவுக்கு அழைத்துவர முடியும்.

இதேவேளை மாணவர் விசாக்களிலும் சில கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளை தவிர்த்து படகுகளில் பிரித்தானியாவுக்கு நுழைபவர்களின் வருகையையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...