உலகம்செய்திகள்

13 லட்சத்து 20 ஆயிரம் பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைப்பு: முக்கிய கையெழுத்திட்ட ஜனாதிபதி புடின்

Share

13 லட்சத்து 20 ஆயிரம் பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைப்பு: முக்கிய கையெழுத்திட்ட ஜனாதிபதி புடின்

ரஷ்யாவில் போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 13 லட்சத்து 20 ஆயிரம் பேரை ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் 2 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரஷ்ய ராணுவத்தில் கூடுதலாக 13 லட்சத்து 20 ஆயிரம் பேரை அணியில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ரஷ்ய ராணுவத்தில் கூடுதலாக 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை பணியில் சேர்ப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கிரெம்ளின் உறுதிப் படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய கருத்தில், உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை மற்றும் நேட்டோ படைகளின் விரிவாக்கம் ஆகிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் இந்த ஆள் சேர்ப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேர்க்கப்படும் வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் படையில் சேர்க்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...