rtjy 1 scaled
இலங்கைசெய்திகள்

வர்த்தக அமைச்சரிடம் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை

Share

வர்த்தக அமைச்சரிடம் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை

கிழக்கு மாகாண சதொசவில் பணிபுரிந்த தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் (01) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,“நான் கைத்தொழில் வர்த்தக அமைச்சராக பொறுபேற்ற போது 275 சதொச கிளைகளே இயங்கின. எனது பதவிக்காலத்தில் அவற்றை 400 ஆக அதிகரித்து, இந்த நிறுவனத்தை இலாபகரமானதாக ஆக்கினேன்.

கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் இயங்கிய சதொச கிளைகள் திட்டமிட்டு மூடப்பட்டன. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

35௦௦௦ ரூபா சம்பளத்தில் இவர்கள் வெளிமாவட்டங்களில் எவ்வாறு பணிபுரிய முடியும்? தமிழ், முஸ்லிம் என்பதனாலா இவர்கள் இவ்வாறு பழிவாங்கப்படுகின்றனர்? எனவே, மூடப்பட்டுள்ள சதொச கிளைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த வர்த்தக வாணிப அமைச்சர் ரமேஷ் பத்திரன, “நீங்கள் சொல்வது முற்றிலும் சாதாரணமானதும் நியாயமானதும் கூட. இருப்பினும், நிறுவனத்தின் இலாபத்தையும் கருத்திற்கொண்டு, அவற்றை மீளத் திறக்க நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...

1 1
சினிமாசெய்திகள்

800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் ராமாயணா படத்தின் முதல் டீசர்.. இதோ பாருங்க

சரித்திர கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம்தான் ராமாயணா. இப்படத்தை இயக்குநர்...

3 2
சினிமாசெய்திகள்

ஜிம்மில் ட்ரெண்டிங் பாடலுக்கு நடனம்.. வைரலாகும் நடிகை மிருணாள் தாகூர் வீடியோ

தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து...