tamilni 26 scaled
சினிமாசெய்திகள்

வலி ஏற்படுத்தியவரை பற்றி பேசுகிறீர்கள்… அனுபவித்தவர்கள் வலி உணர்வது இல்லை… ரச்சிதா எமோஷ்னல் பதிவு…

Share

வலி ஏற்படுத்தியவரை பற்றி பேசுகிறீர்கள்… அனுபவித்தவர்கள் வலி உணர்வது இல்லை… ரச்சிதா எமோஷ்னல் பதிவு…

நடிகர் தினேஷ் மற்றும் நடிகை ரச்சிதா ஒன்றாக சேர்ந்து நடித்த முதல் சீரியலிலேயே நண்பர்கள் ஆகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தற்போது இருவரும் பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்ட தினேஷ் தனது மனைவியுடன் சேர விரும்புகிறேன். என்னுடைய மனைவிக்கு பிக்பாஸ் டைட்டில் ரொம்பவே பிடிக்கும் அதனால் அவருக்காக நான் இந்த டைட்டிலை வாங்கி பரிசளிப்பேன் என்று கூறியிருந்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் தினேஷ் மற்றும் ரச்சிதா ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றுசோசியல் மீடியா பக்கங்களில் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், எல்லாரும் வலி ஏற்படுத்தியவர்களை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்த அளவிற்கு உறுதியான முடிவில் இருக்க வேண்டுமென்றால் எவ்ளோ வலியை சந்தித்து இருப்பேன் என்று யாரும் யோசிக்கவே இல்லை என ரச்சிதா பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் ரச்சித்தாவிற்கும் ஆறுதல் கூறி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...