tamilni 446 scaled
இலங்கைசெய்திகள்

புத்த பெருமான் தலைகுனியும் அளவுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள்

Share

புத்த பெருமான் தலைகுனியும் அளவுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள்

புத்த பெருமான கூட வெட்கித் தலைகுனியக்கூடிய அளவுக்குத் தான் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சுக்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (29.11.2023) நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 1989 ஆண்டு புதிய பிரதேச செயலர் பிரிவாக அங்கீகரிக்கப்பட்டது.

1993 இல் அமைச்சரவைப் பத்திரத்தினூடாக அங்கீகரிக்கப்பட்ட தனி பிரதேச செயலாளர் பிரிவாக இயங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டு, அது உத்தியோகபூர்வமாக இயங்கி வந்தது.

காலப்போக்கில், முழுமையாக பிரதேச செயலாளர் பிரிவாக இயங்குவதற்குரிய கணக்காளர் போன்ற முக்கியமான நியமனங்களை அதற்கென வழங்காமல், அரசியல் காரணங்களுக்காக கல்முனை முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவுக்கு நியமனம் செய்து கல்முனை வடக்கு பிரதேச செயலம் உப பிரிவாகவே செயற்பட்டு வருகின்றது.

இதனால் மக்களுக்கு தேவையான நிர்வாகத்தை நடத்த முடியாமலும், அரசியல் காரணங்களால் பழிவாங்கல்களும் நடைபெற்று வருகின்ற நிலையில், கடுமையான பாதிப்புக்களை தமிழ் மக்கள் சந்திக்கிறார்கள்.

இதன் காரணமாக, ஏற்கனவே வர்த்தமானி மூலம் அங்கீகரிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருந்த முடிவை நடைமுறைபடுத்துவதற்கு இன்றைக்காவது நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

இந்தவிடயத்தை பல வருடங்களாக கேட்டுக் கொண்டு வருகின்றோம். ஆனாலும் எதுவும் நடைபெறாமல் உள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவொரு நியாயமான காரணங்களும் கிடையாது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம் பிரிவுகள், சிங்களப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத குடியேற்றங்கள் நடந்திருந்தும் கூட அந்த சட்டவிரோதமான செயலை சட்ட பூர்வமாக்குகின்ற வகையில் அந்தப் பிரிவுகளை உருவாக்க முடியுமானால், இயல்பாகவே – பூர்வீகமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களுடைய பிரதேச செயலகர் பிரிவை அங்கீகரிக்க ஏன் உங்களால் முடியாதுள்ளது? என்ற கேள்வியை பிரதமரினடைய பொதுநிர்வாக அமைச்சுக்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்று உலகத்துக்கு நல்லிணக்கத்தைப் பற்றி பேசுகின்ற நீங்கள் இதையாவது செய்யுங்கள்.

அரசியல் காரணங்களுக்காக – இந்த அநியாயங்கள் தமிழ் மக்களுக்கு தொடர்வதை அனுமதிக்க வேண்டாம். வேறு தரப்புகளுக்கு கிடைக்கக் கூடிய அங்கீகாரங்களை நாம் ஒருபோதும் தடுப்பவர்களல்ல. எங்களுக்கு தேவைப்படும் விடயத்தையே நாங்கள் கேட்கின்றோம்.” என்றார்.

Share
தொடர்புடையது
875262697 1
இலங்கை

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம் பணம் பறித்த கும்பல் கைது!

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை...

image 1000x630 13
இலங்கை

குற்றவாளிகளைப் பிடிக்க இன்டர்போல் உதவி: குற்றவாளிகளை நாடு கடத்த நடவடிக்கை

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நேர்மறையான நடவடிக்கைகளை இன்டர்போல்  பாராட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக,...

image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...