1 8 scaled
உலகம்செய்திகள்

இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

Share

இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதற்கிடையே பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. அப்போது பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தப்படி முதல் கட்டமாக இஸ்ரேல், தாய்லாந்தைச் சேர்ந்த 25 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேல் வசம் உள்ள 39 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. இதில் 13 இஸ்ரேலியர்களும், 4 தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர். அவர்கள் காசா எல்லை வழியாக எகிப்தை அடைந்தனர்.

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...