tamilni 395 scaled
இலங்கைசெய்திகள்

முழு உரிமைகொண்ட காணி உறுதிப்பத்திரம்

Share

முழு உரிமைகொண்ட காணி உறுதிப்பத்திரம்

அனுமதிப்பத்திரம் பெற்ற காணி உரிமையாளர்களுக்கு முழு உரிமைகொண்ட காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளுடன் நேற்றையதினம் (25.11.2023) இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திர தினத்திற்கு இணையாக நாடு முழுவதும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த காணி உறுதிப்பத்திர செயற்பாடுகளை மாவட்ட அபிவிருத்திக் குழுக்களிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளதோடு இந்த திட்டத்திற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நில மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து நில உரிமங்களும் காணி உறுதிப் பத்திரங்களாக மாற்றப்படுவதோடு அதன் முதல் கட்டமாக தம்புள்ளை விளையாட்டரங்கில் 10,000 காணி உறுதிகள் வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.

அத்துடன், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் கீழ் வழங்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை கொழும்பில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மலையகத்தில் அபிவிருத்தி செய்யப்படாத பிரதேசங்களின் அபிவிருத்திக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் தலா 10 மில்லியன் ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

நாட்டில் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதன் முதல் படி உரிமையாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன், மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க. , மத்திய மாகாண சபைத் தலைவர் எல். டி.நிமலசிறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
574922858 1463456808471913 8345646138916257300 n
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா நிவாரணம்: இதுவரை 3 இலட்சம் வீடுகளுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கீடு!

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபாய் ஆரம்பக் கொடுப்பனவு, இதுவரை...

image b726ec86c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டன் – டிக்கோயாவில் அனைத்து கட்டுமானங்களுக்கும் உடனடித் தடை: மீறினால் கடும் நடவடிக்கை!

‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, ஹட்டன்-டிக்கோயா நகர சபை...

25 687ca2a2564c6
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி!

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கொள்கையல்ல என பிரதமர் ஹரிணி...

gen z and workplace boundaries ai image
செய்திகள்இந்தியா

‘Gen Z’ பணியாளர்கள் மத்தியில் பரவும் ‘மௌன விலகல்’!

இந்தியாவின் தற்போதைய இளம் பணியாளர்கள் (Gen Z) மத்தியில் ‘மௌன விலகல்’ (Silent Resignation) அல்லது...