1592769 cgadi
உலகம்செய்திகள்

33 வயதில் ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்.., ஸ்டீராய்டு மருந்து காரணமா?

Share

33 வயதில் ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்.., ஸ்டீராய்டு மருந்து காரணமா?

பிரேசில் நாட்டை சேர்ந்த மருத்துவரும், ஜிம் பயிற்சியாளருமான ஒருவர் 33 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் (33). இவர், மருத்துவராகவும், ஜிம் பயிற்சியாளராகவும் இருந்து வந்துள்ளார்.

மேலும், இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்து பிரபலமாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், மருத்துவம் தொடர்புடைய வீடியோக்களையும் பதிவிட்டு வந்துள்ளார். இவரிடம் சில பயனர்கள் இன்ஸ்டாகிராம் வழியே ஆலோசனை கேட்டும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், இவர் ஸ்டீராய்டு வகை மருந்துகளை உட்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மருத்துவமனையில் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சிகிச்சை பெற்று வந்துள்ள ஜிம் பயிற்சியாளர் டாஸ் சான்டோஸ் உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கு காரணம் மாரடைப்பு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சாஞ்செஸ் என்ற பெண்ணுடன் இவருக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.

வருங்கால கணவரின் மறைவிற்கு கிடார் வாசித்து பாடல் பாடி சோகத்தை சாஞ்செஸ் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...