tamilni 385 scaled
உலகம்செய்திகள்

கஞ்சா போதையில் பெற்ற தாயை கொன்று புதைத்த 21 வயது மகன்!

Share

கஞ்சா போதையில் பெற்ற தாயை கொன்று புதைத்த 21 வயது மகன்!

தமிழக மாவட்டம் கடலூரில் 21 வயது இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் – கஸ்தூரி தம்பதியின் இளைய மகன் சேவாக் (21).

சேவாக்கின் தாய் கஸ்தூரியைக் காணவில்லை என அவரது உறவினர்கள் போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போது சேவாக் சரியாக பதில் கூறாமல் போனை வைத்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், உடனடியாக கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று அங்கு ரத்தக்கறை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் வீட்டின் உள்பகுதியில் பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளதைப் பார்த்து சந்தேகமடைந்த பொலிஸார், அங்கு தோண்டியபோது அதிர்ச்சியடைந்தனர்.

கஸ்தூரி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார். கஞ்சா போதையில் இருந்த சேவாக் தாய் என்றும் பாராமல் அடித்துக் கொன்று புதைத்தது தெரிய வந்துள்ளது.

பின்னர் கஸ்தூரியின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், கொலையாளியான சேவாக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் தனது தாயை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...