இலங்கை
அதிவேக நெடுஞ்சாலை கடமைகளில் இராணுவத்தினர்
அதிவேக நெடுஞ்சாலை கடமைகளில் இராணுவத்தினர்
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து தரப்பு ஊழியர்களும் அரசாங்கத்திற்கு எதிராக சுகயீன விடுமுறையை பதிவு செய்ததன் காரணத்தினால் குறித்த கடமைகளை முன்னெடுக்க இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இன்றையதினம் (22.11.2023) வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து தரப்பு ஊழியர்களும் சுகயீன விடுமுறையைப் பதிவுசெய்து பணிக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதன் காரணமாகவே குறித்த பணிக்கு இராணுவத்தினர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் பூர்வாங்க நடவடிக்கையாக நேற்று (21) பனாகொட இராணுவ முகாமின் உப பிரிவினர், நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்பு முகாமைத்துவ பிரிவின் ஆலோசனையின் கீழ் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்ததுடன், அதன் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அதன் பணிப்பாளரின் வழிகாட்டுதலின் பேரில், கடமைகளை உள்ளடக்கிய இடங்கள் பற்றிய புரிதலைப் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.