9 10 scaled
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் எதை நோக்கி போகிறது…விக்ரமோடு தப்பித்த வில்லங்கம்…

Share

பிக் பாஸ் எதை நோக்கி போகிறது…விக்ரமோடு தப்பித்த வில்லங்கம்…

பிக் பாஸ் நேற்றைய எபிசோடில் எட்டு போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி இருந்தனர். ஆனால் இந்த ஜோவிகா மட்டும் தொடர்ந்து தப்பித்து வருவது பலருக்கு எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டை பொருத்தவரையில் ஒன்றும் தெரியாத மக்கு என்று தான் இவரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது இவருக்கு பாடவும் வரல, ஆடவும் வரல, மரியாதையும் வரல. மத்தவங்கள மதிக்கவும் வரல ஆனால் சூனியக்கார கும்பலோடு சேர்ந்து வில்லத்தனம் மட்டும் செய்ய தெரியும். அதிலும் பிரதிப் வெளியேறியதற்கு பிறகு வந்த வாரத்தில் இவர் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது.

இதுவே ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்தது. அதை தொடர்ந்து கமலின் சில அறிவுரைகளால் இவர் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். இருப்பினும் இந்த வாரம் நாமினேஷனில் இரண்டு ஓட்டுகளை வாங்கிய இவர் தப்பித்ததை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் அதே இரண்டு ஓட்டுகளை வாங்கிய ரவீனா நாமினேஷன் பட்டியலில் இருக்கிறார். அப்படி பார்த்தால் இவர் பிக்பாஸால் காப்பாற்றப்படுகிறாரா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆக மொத்தம் மிக்சர் விக்ரம் தான் தப்பிச்சாருன்னு பார்த்தா இந்த மிக்சர் குடோனும் தப்பித்து விட்டது.

இந்த ஷோ எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தான் பிக்பாஸ் ஆடியன்ஸின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும். அந்த அளவுக்கு விஷயங்கள் எல்லாம் நடந்து வருகிறது. அதிலும் மக்களால் வெளியே துரத்தப்பட்ட மூன்று பேர் மீண்டும் வருவது சிறு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...