புடினுடைய ரகசிய காதலி வீட்டுச் சிறையில்… அதிகாரம் இழந்ததாக தகவல்
புடினுடைய ரகசிய காதலி என நீண்ட காலமாக அழைக்கப்படும் ஒரு பெண், தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ஊடுருவல் உட்பட எந்த விடயமானாலும், புடினைக் கைவிடாமல், அவருக்கு ஆதரவாக உரத்துக் குரல் கொடுப்பவர் என கருதப்படுபவர் அவரது ரகசிய காதலியான அலீனா (Alina Kabaeva, 40).
புடினுடன் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் பிரபல தடகள வீராங்கனையான அலீனா, சமீப காலமாக வெளியில் தலைகாட்டவில்லை.
வீட்டுக் காவலில்…
அதற்குக் காரணம், அலீனா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுதான் என கிரெம்ளின் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
புடின் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது மறைவைத் தொடர்ந்து கிரெம்ளின் மாளிகையை தலைமையேற்றுள்ள நபரின் ஆதரவு அலீனாவுக்குக் கிடைக்கவில்லையாம்.
ஆகவே, கடுமையான பாதுகாப்புக்கிடையே அலீனா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இப்போது அதிகாரம் எதுவும் இல்லையென்றும் கூறப்படுகிறது.