download 7
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோரின் வாழ்வை கடினமாக்கும் மசோதா: பிரான்சில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்

Share

புலம்பெயர்ந்தோரின் வாழ்வை கடினமாக்கும் மசோதா: பிரான்சில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்

பிரான்ஸ் செனேட்டர்கள், புலம்பெயர்தல் சட்டங்களை கடினமாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதா தொடர்பில் நடத்திய விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மசோதா மீதான வாக்கெடுப்பு, பிரெஞ்சு செனேட்டில், அதாவது நாடாளுமன்றத்தின் மேலவையில், நேற்று, செவ்வாய்க்கிழமை, நடைபெற்றது.

மசோதாவுக்கு ஆதரவாக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து மசோதாவை நிறைவேற்றியுள்ளார்கள். 210 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 115 பேர் எதிராகவும் வாக்களிக்க, மசோதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த மசோதா, புலம்பெயர்தலைக் கடினமாக்கும் நோக்கத்துடனேயே கொண்டுவரப்பட்டுள்ளது. காரணம், அதில், நீண்ட காலமாக பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு பணி விசா வழங்குவதைக் கட்டுப்படுத்துதல், ஒழுங்கற்ற புலம்பெயர்ந்தோருக்கான மருத்துவ உதவிகளை முழுமையாக நீக்குதல் முதலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடும், சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் என கருதப்படும், வெளிநாட்டவர்கள் மீது கண்டிப்புடன் நடந்து, அவர்கள் அனைவரையும் நாடுகடத்துதலை விரைவாக்க உதவும் நோக்கம் கொண்டது இந்த மசோதா. அத்துடன், மத்தியதரைக்கடல் பகுதியில், ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக அதிக உதவியை வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...