rtjy 156 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆட்சியாளர்களுக்குச் சொர்க்கமும் மக்களுக்கு நரகமும் கொண்ட பட்ஜட்!

Share

ஆட்சியாளர்களுக்குச் சொர்க்கமும் மக்களுக்கு நரகமும் கொண்ட பட்ஜட்!

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஆட்சியாளர்களுக்குச் சொர்க்கமும் மக்களுக்கு நரகமும் காட்டப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்

“வரவு – செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்தார். பிரார்த்தனை செய்ய வேண்டியவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று புத்த பகவான் கூட போதித்தார். ஆனால், தற்போதைய ஜனாதிபதி பிரார்த்தனை செய்யவில்லை.

இது நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி. இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நரகம் பற்றிப் பேசினாலும், ஆட்சியாளர்கள் சொர்க்க லோகத்தில் உள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வருவாய் இலக்குகளை நிறைவு செய்ய முடியாததால், அதன் இரண்டாவது கட்டக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், ஏனோதானே அடிப்படையில் வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் திட்டம் பற்றிப் பேச முன், 2023 ஆம் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் எத்தனை விடயங்களை நிறைவேற்ற முடிந்தது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

இன்று சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்ட முன்மொழிவில் பாரியளவிலான விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...