அரசியல்
வரவு செலவுத் திட்ட ஆதரவு: பசிலிடம் கோரிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மொழிவுகள் அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்படாவிடின் அதற்கு ஆதரவளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மக்களுக்கு சேவையாற்றுவதற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி முன்னர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் ஜனாதிபதி அதனைச் செய்யத் தவறியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.
இந்நிலையில் குறைந்தபட்சம் அந்தந்த அமைச்சர்களின் பிரேரணையாவது வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாவிட்டால் கிராமங்களுக்குச் சென்று எதிர் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என பசில் ராஜபக்சவிடம் அவர்கள் வலியுறுத்தியதாகத் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துமாறு மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.