rtjy 133 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்

Share

இலங்கையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்

தற்போது இந்தியாவின் அதானி, டாட்டா போன்ற நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளன, மேலும், சீனாவின் துறைமுக நகர நிறுவனம், சினோபெக் நிறுவனம் பாரியளவில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில், எமக்கு முக்கியமாக இருந்தது சர்வதேசத்தில் நமது நாட்டைப் பற்றிய சரியான பிம்பத்தை உருவாக்குவதேயாகும். நாடு மிகவும் மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தின் பின்னர் மீண்டும் எழுந்திருப்பதற்குத் தேவையான மறுசீரமைப்பைச் செய்வதற்கு அரசாங்கத்தினால் முடிந்திருக்கின்றது.

இந்த நிலையில்தான் சர்வதேசமும் எம்மோடு இணைந்து கொள்கிறது. அந்தச் செய்தி சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகவே செல்ல வேண்டும்.

அதன் காரணமாகத்தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக நாம் செய்து கொண்ட ஒப்பந்தம் எமக்கு முக்கியமாகின்றது.

கடன் தொகையின் முதல் தவணை பெறப்பட்டதன் மூலம், நாட்டை படுகுழியில் இருந்து மீட்க நாம் எடுத்த நடவடிக்கை வெற்றிகரமான ஒன்று என்பது உறுதியானது.

அதன் மூலம் உலக வங்கி எமக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி செய்யத் தொடங்கியது. கடன் மறுசீரமைப்பைச் செய்வதற்கு அனைத்தும் மிகவும் முக்கியமானதாகியது. இவற்றால் வரும்காலங்களில் முதலீடுகள் இலங்கைக்கு வரத் தொடங்கும்.

தற்போது இந்தியாவின் அதானி, டாட்டா போன்ற நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளன. சீனாவின் துறைமுக நகர நிறுவனம், சினோபெக் நிறுவனம் பாரியளவில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன. அண்மையில் அமெரிக்காவின் டீ. எப். சீ என்ற நிறுவனம் பல்வேறு துறைகளில் ஒரு பில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையில் மாத்திரம் 533 மில்லியன் டொலரை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச சமூகத்தில் ஒரு நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதை இதிலிருந்து நாம் அறியலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...