ஏனையவை
தினேஷ் ஷாப்டரின் காப்புறுதி தொகை தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு
தினேஷ் ஷாப்டரின் காப்புறுதி தொகை தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு
தினேஷ் ஷாப்டரின் காப்புறுதித் தொகையை செலுத்துவதை ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவன அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவானது நேற்று(08.11.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் குற்றம் என உறுதி செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பில் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு காப்புறுதி இழப்பீட்டை வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு காப்புறுதி நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்தே ஒரு வார கால அவகாசம் வழங்கி நீதிவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.