அரசியல்இலங்கைசெய்திகள்

சமஷ்டி அடிப்படையில் தீர்வை முன்னெடுக்கும் இலங்கை தமிழரசு கட்சி

Share
rtjy 29 scaled
Share

சமஷ்டி அடிப்படையில் தீர்வை முன்னெடுக்கும் இலங்கை தமிழரசு கட்சி

சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்னத்தினால் கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள் தொகுக்கப்பட்டு ‘கிழக்கின் சிவந்த சுவடுகள்’; என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்த நூலைப் பொறுத்த வரையில் சமகால அரசியலில் நாங்கள் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தற்பொழுது எங்களுடைய சில அரசியல் ரீதியாக அடைவதற்காக முயற்சி எடுக்கும் விடயங்களை அதற்கு கடந்த காலங்களிலேயே நடந்த சில விடயங்களை வைத்து சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

உண்மையிலே இலங்கை தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் எங்களுடைய அரசியல் தீர்வு மற்ற விடயம் எங்களுடைய பொறுப்பு கூறல் இந்த இரண்டு விடயங்களில் பிரதானமான விடயங்களாக முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றோம் அப்போது கடந்த காலங்களில் அதாவது நான் பிறப்பதற்கு முன்னர் நடந்த சில விடயங்கள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக நான் நினைக்கின்றேன் இலங்கையில் மிக முக்கியமாக நான்கு இயக்கங்கள் தமிழ் மக்கள் சார்ந்து நான்கு இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவை அனைத்தினுடைய கோரிக்கைகளும் தனி நாடு என்பதாகவே இருந்தது.

நான் நினைக்கின்றேன் 1987ம் ஆண்டு காலப்பகுதிக்கு பிற்பாடு அமைதிப்படை வந்ததன் பிற்பாடு எங்களுடைய நான்கு இயக்கங்களில் ஒரு இயக்கத்தை தவிர ஏனைய இயக்கங்கள் அனைத்தும் தங்களுடைய கொள்கைகளை மாற்றி இருந்தது.

ஒரே ஒரு இயக்கம் தான் தனி நாடு என்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்கள். தற்பொழுது சமகால அரசியலைப் பொறுத்த வரையிலே எங்களுடைய கட்சிகளை பொறுத்த அளவில் எத்தனையோ பிரதானமான கட்சிகள் இருந்தாலும் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே.

இந்த புத்தகம் எழுதுவது அண்ணன் துரைரத்தினமாக இருந்தாலும் இதில் இருக்கும் விடயங்களை நான் கூறினால் சாணக்கியன் தான் இந்த விடயங்களை கூறுகின்றார் என்று வரும். 2004 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த காலப்பகுதி அந்த தேர்தல் நடந்த தேர்தல் விடயங்களை பற்றி இந்த நூலிலே ஐயா மிக தெளிவாக எழுதி இருக்கின்றார்.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் எட்டு வேட்பாளர்களில் ஜோசப்பரராஜ சிங்கம் ஐயா மாத்திரம் தான் வன்னி விடுதலை புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக கருணா நடத்திய கூட்டத்திலே பேசியதாக அவருடைய இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. ஏனைய வேட்பாளர்கள் மதில் மேல் பூனையாக இருந்தார்கள் என எழுதி இருக்கின்றார்.

ஆனால் மதில் மேல் பூனையாக இருந்ததற்கு பின்னர் நான் நினைக்கின்றேன் அந்த நேரத்திலே கருணா அவர்களுக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு என்னென்ன விடயங்கள் நடந்தது அது எவ்வாறு நடந்தது அதனை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் இதிலே பல குற்றச்சாட்டுகள் கிங்ஸ்லி இராசநாயகத்தினைடைய கொலை தொடர்பான பல குற்றச்சாட்டுகள் பொதுவாக பல இடங்களிலேயே பலருக்கு எதிராக விரல் நீட்டப்படுகின்றது அவ்வாறான விடயங்களுக்கு மிகத் தெளிவான பதிலை இந்த புத்தகத்திலே வழங்கி இருக்கின்றார். என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...