10 scaled
சினிமாசெய்திகள்

‘நோ மீன்ஸ் நோ’ பெண்களின் மனவலியை நடனத்தினால் பிரதிபலித்த ரவீனா, ஐஷு

Share

நோ மீன்ஸ் நோ பெண்களின் மனவலியை நடனத்தினால் பிரதிபலித்த ரவீனா, ஐஷு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7ல் இடம்பெற்ற டான்ஸ் டாஸ்க் ஒன்றில் ரவீனா மற்றும் ஐஷு இணைத்து நடனமாடி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து புதியவர்கள், பழையவர்கள் என வீட்டிற்குள் மோதல் வலுத்துள்ளது. எனினும் போட்டி போட்டியாகவே நகர்கின்றது.

இவ்வாறான நிலையிலேயே போட்டியாளர்கள் இடையே இடம்பெற்ற டான்ஸ் ஷோவில் ரவீனா மற்றும் ஐஷு இணைத்து நடனமாடி பட்டையை கிளப்பியுள்ளனர்.

அதன்படி, ‘உசுரே போகுது உசுரே போகுது’ என்ற பாடலுக்கு பெண்கள் மீது இடம்பெறும் பாலியல் சேட்டைகள், பெண்களின் மனவலி போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக இவர்களின் நடன நிகழ்ச்சி அமைந்திருந்தது .

இதன் முடிவில் ‘நோ மீன்ஸ் நோ’ என்கிற செய்தியை சரியாக நடனமாடி பிரதிபலித்துள்ளீர்கள் என்று விசித்ராவும் பாராட்டினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...