7 1 scaled
உலகம்செய்திகள்

லண்டன் சுரங்கப்பாதையில் பெண் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி

Share

லண்டன் சுரங்கப்பாதையில் பெண் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி

லண்டன் சுரங்கப்பாதையில் அடுத்தடுத்து இரண்டு ரயில் மோதி கை மற்றும் காலை இழந்த பிரித்தானிய தாய் ஒருவர் தன்னுடைய தவிர்த்திருக்க கூடிய தவறால் வருந்துகிறார்.

வடக்கு லண்டனில் உள்ள உயர் பார்னெட் சுரங்க ரயில் நிலையத்தின் நடைபாதையில் இருந்து தவறி விழுந்து, சாரா டி லகார்டே(Sarah de Lagarde) என்ற பிரித்தானிய தாய் தன்னுடைய தவிர்த்திருக்க கூடிய தவறினால் கை மற்றும் காலை இழந்து வாழ்க்கையில் பெரும் இழப்பை சந்தித்துள்ளார்.

செப்டம்பர் 2022ம் ஆண்டு ரயில் நிலையத்தின் நடைப்பாதைக்கும், நிலையான ரயிலுக்கும் இடையே சாரா டி லகார்டே தவறி விழுந்தார்.

இதனால் அவருக்கு மூக்கு மற்றும் இரண்டு பற்கள் உடைந்தது, துரதிஷ்டவசமாக அவர் தவறி விழுந்ததை யாரும் கவனிக்க தவறிவிட்டனர்.

நடைப்பாதைக்கும், ரயிலுக்கும் இடையே சாரா டி லகார்டே சிக்கி கொண்டு இருக்கும் போதே ரயில் புறப்பட்டதால், சாரா டி லகார்டே தன்னுடைய கைகளை இழந்தார்.

பயங்கர கூச்சலிட்ட பிறகும் யாரும் சாரா டி லகார்டே-வை கவனிக்க தவறியதால் இரண்டாவதாக வந்த ரயில் அவரது காலை துண்டாக்கியது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு பிறகே நபர் ஒருவர் அலாரத்தை ஒலிக்க செய்து, அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டனர்.

இந்த மொத்த சம்பவம் நிகழும் போது சுயநினைவுடன் இருந்த சாரா டி லகார்டே வீட்டிற்கு திரும்பி விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருந்ததாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மனக்கண்களில், அவருடைய இரண்டு மகள்கள் தெரிந்ததாகவும், அவர்கள் தன்னை அம்மா நீங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று தெரிவித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...