rtjy 6 scaled
இலங்கைசெய்திகள்

மயிலத்தமடுவில் உயிர்ப்பலிகள் ஏற்படக்கூடும்

Share

மயிலத்தமடுவில் உயிர்ப்பலிகள் ஏற்படக்கூடும்

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டுவருவதாகவும் எதிர்காலத்தில் அங்கு உயிர்ப்பலிகள் ஏற்படுவதற்கான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது 47வது நாளாகவும் இன்றும் நடைபெற்றுவருகின்றது.

சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமது மேய்ச்சல் தரை காணிகளில் தொடர்ச்சியான அத்துமீறல்கள் முன்னெடுக்கப்படும் நிலைமையே காணப்படுவதாகவும் ஜனாதிபதி தமக்கு வழங்கி உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையெனவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

தமது மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கையெடுக்காத பொலிஸார் தமது கோரிக்கையினை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டாளர்கள் அப்பகுதியில் பல்வேறு அட்டூழியங்களை செய்துவருவதாகவம் வாய்பேசமுடியாத கால்நடைகளை கொடுமைப்படுத்திவருவதாகவும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரையில் அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காத நிலையில் தாம் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...