இலங்கை
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல்
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல்
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது என அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வருடமொன்றுக்கு மூன்று தடவைகள் மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை சட்டத்தில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை முன்வைத்த 4 காரணங்களும் பொய்யானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், 18 வீதத்தில் இருந்து 20 வீதம் வரையான மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.