இருதார தோஷத்துக்கு இலகுவான பரிகாரம்?

1795055 dosha parinaram

இருதார தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டி விடுவார்கள்! இப்படிப்பட்ட ஒரு பரிகாரம் இந்த இருதார தோஷத்திற்கு செய்து வருகிறார்கள். இது ஏற்புடையதா? என்றால் நிச்சயமாக இல்லை.!

எந்த ஜோதிட நூல்களிலும் இப்படிப்பட்ட பரிகாரத்தை ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடவே இல்லை. பொதுவாக இந்தப் பரிகாரத்தைச் செய்பவர்கள் வாழைமரத்தை ஏற்கனவே வெட்டி எடுத்து வந்து, அதற்கு தாலி கட்டச் சொல்வார்கள். ஏற்கெனவே வெட்டப்பட்ட வாழைமரம் உயிர்ப்போடு இருக்காது என்பது எல்லோரும் அறிந்ததே.

இன்னும் ஒரு சிலர் வாழைத்தோப்புக்கே கூட்டிச் சென்று, அங்கே ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டுவதைச் செய்கிறார்கள். இது எதுவுமே பரிகாரத்தில் வரவே வராது. இதில் வருந்தக் கூடிய விஷயம் என்னவென்றால் பெண்களுக்குக் கூட இந்த வாழைமர பரிகாரத்தை செய்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.

அப்படியானால் இந்த இருதார தோஷத்திற்கு என்னதான் பரிகாரம்? என்று கேட்டால்..! மிக எளிமையான பரிகாரம் உள்ளது.

இரு தார தோஷம் இருப்பவர்கள் திருமணம் முடிந்தவுடன், மூன்றாவது மாதத்தில், கட்டிய தாலியை ஏதாவது ஒரு ஆலயத்தின் உண்டியலில் செலுத்தி விட்டு, அந்த ஆலயத்தின் இறைவன் முன்னிலையில் மீண்டும் தாலி கட்டிக்கொள்வதே எளிமையான பரிகாரம்! இரு தாரம் எனும் தோஷம் இப்படித்தான் விலகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

#anmigam

Exit mobile version