நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நான்கு கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3,884 பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரை முதல் கட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி தேவையில்லை என்பதால், தரம் 1 முதல் 5 வரை பாடசாலைகளை திறப்பதற்கான முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கான பாதுகாப்பான சூழல் குறிப்பிட்ட பாடசாலைகள் உள்ளனவா என்பது குறித்து மாகாண ஆளுனர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் இணைந்து கண்காணிப்புக்களை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, பாடசாலைகளின் சுகாதாரத்தை உறுதிசெய்த பிறகு, பரிந்துரைகள் கிடைத்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளார்.
Leave a comment