வெட்டுக்கிளி புகுந்த வயலும் சீனா புகுந்த நாடும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.இவ்வாறு ஜேர்மன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கை அகிம் ஸ்கோன்பெக் கூறியுள்ளார்.
சீனா ஒரு நாட்டில் கண் வைத்து விட்டால் அந்த நாட்டின் வளங்களை கைப்பற்றும் வரை அந்தந்த நாடுகளின் சர்வாதிகாரிகள் மற்றும் கொலைகாரர்களுக்கும் நிதி வழங்கும்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேட்டோ அமைப்பில் இணைந்துகொள்வதற்கான தகைமைகளை உக்ரைன் இதுவரை பூர்த்தி செய்யவில்லை. சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ரஷ்யா கொண்டிருக்க வேண்டுமென்பதே பல நாடுகளின் விருப்பம்.
இதனிடையே உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா விரும்புவதாக தெரிவிக்கப்படும் கருத்து முட்டாள்தனமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்து வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து ஜேர்மன் கடற்படைத் தளபதி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews