மருத்துவம்

வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளதா?

Published

on

வெற்றிலை ஏராளமான மருத்துவ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது பல நோய்களுக்கு அருமருந்தாகவும் திகழ்கின்றது.

அந்தவகையில் வெற்றிலையில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

  • தீக்காயங்கள் உள்ள இடத்தில் வெற்றிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தடவி வரலாம். தீக்காய எரிச்சல் நீங்கும். காயமும் விரைவாக ஆறும்.
  • வெற்றிலையை வெறும் வாயில் மென்று வந்தால் பற்கள், ஈறுகள் பலப்படும். பல் சொத்தையாவதும் தவிர்க்கப்படும்.
  • வெற்றிலையை சாறு எடுத்து பருகினால் அது துர்நாற்றத்திற்கு காரணமான நுண்கிருமிகளை கொன்று நிரந்தர தீர்வளிக்கும்.
  • 10 வெற்றிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு சாறு எடுத்துக்கொள்ளவும். அந்த சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தேய்த்து விட்டு, சிறிது நேரம் கழித்து குளித்துவிடலாம். குளிக்கும் நீரிலும் இந்த சாற்றை கலந்து கொள்ளலாம். எரிச்சல், அரிப்பு, அலர்ஜி போன்ற சரும பிரச்சினைகள் நீங்கும்.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு  நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள்  குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது.

    #Lifestyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version