கிரீன் ரீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
1. கிரீன் ரீ தூளை சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள்.
2. அதனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழையுங்கள்.
3. பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேருங்கள்.
4. அதனையும் நன்கு கலந்து முகம் முழுவதும் பூசுங்கள்.
5. 10 முதல் 15 நிமிடங்கள் உலர விடுங்கள்.
6. முதலில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.
7. பின்பு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
இரசாயனங்கள் பயன்படுத்தாமல் இயற்கையான வழிமுறையில் சருமத்தை மெருகேற்றிக்கொள்ளலாம். சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்றால் பரிசோதித்த பின்னர் பயன்படுத்துவது நல்லது.
#BeautyTips