அழகுக் குறிப்புகள்

முகப்பருக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இதோ சில இயற்கை வைத்தியம்

Published

on

முகப்பருக்கள் முகத்தின் அழகையே அழித்து விடும்.

முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம்.

இதனை முடிந்தவரை இயற்கைமுறையில் நீக்குவதே சிறந்தது. தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.

  • தினமும் சிறு சிறு தக்காளி துண்டுகளைக் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால் முகப்பருக்களும், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.
  •  கிராம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் குளிர வைக்க வேண்டும். குளிர வைத்த கிராம்பை அரைத்து பருக்கள் உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர பருக்கள் குணமடையும்.
  • வாழைப்பழத்தின் தோலை அரைத்து அதனுடன் குறைந்தளவு தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகப்பரு மற்றும் கரும்புகளில் இருந்து விடுபடலாம்.
  • பருக்கள் உள்ள இடங்களில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்த பிறகு பால் கொண்டு கழுவி, குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்களை போக்கலாம்.
  • கடலை மாவு, சந்தனப் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் பருக்கள் நீங்கும்.
  • ஆவிப்பிடித்தால் முகத்துவாரங்கள் திறந்து, அதிலுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இதன் மூலமாக மாசு நிறைந்த இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறி பருக்களை குணப்படுத்தலாம்.

    #Lifestyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version