செய்திகள்

வீதி விபத்தை தடுக்க விழிப்புணர்வு குழு நியமனம்

Published

on

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற விபத்துக்களை தடுப்பது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதத்திலும் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட தொழிற் பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்னால் பாடசாலை மாணவியியொருவர் உயிரிழந்ததுடன் சில நாட்களாக கிளிநொச்சியில் வீதி விபத்துக்களில் அதிகளவானோர் உயிரிழந்து இருக்கின்றனர்.

அதனைக் கருத்திக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரச அதிபர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாடசாலை அதிபர் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் விபத்துக்களை தடுக்கும் விதத்தில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் கொவிட் காரணமாக குறித்த செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எதிர்வரும் காலங்களில் இந்த விபத்துகளை தடுப்பதற்கு ஏற்ற விதத்தில் மாவட்ட மேலதிக அரச அதிபர் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, உதவி பொலிஸ் அத்தியட்சகர், பாடசாலை அதிபர்கள் என பலர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக் குழு மூலம் விழிப்புணர்வு, ஆலோசனைகளை பெற்று எதிர்காலத்தில் இந்த விபத்துக்களை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை முன்னெடுக்கும் விதத்திலே குறித்த கலந்துரையாடல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சட்ட வைத்திய அதிகாரி கல்விப் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தனர்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version