காணொலிகள்

ஆரியகுளம் புனரமைப்பும் – கருத்துருவாக்க சர்ச்சைகளும்!!

Published

on

இலங்கையினுடைய வரலாற்று பின்னணியில் தமிழர்களின் பழமை வாய்ந்த நாகரிகம் கலாசார பண்புகள் என்பன மிக முக்கியமான தாக்கம் வகிக்கக்கூடியவையாக இருக்கின்றன. இலங்கையின் பிரதான இனக்குழுக்களில் ஒன்றாக தமிழர்கள் இருப்பதன் காரணமாக அவர்களது கலை, வழிபட்டு முறைமைகள், உணவுப் பாரம்பரியம், கலாசாசரம் என்பவற்றுடன் அணுகியே ஒரு நாட்டின் வரலாற்றை எடுத்து நோக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

வடக்கு மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் திகழ்கின்ற நிலையில் குறித்த யாழ். மாவட்டத்தின் ஓர் அங்கமாகவும், அண்மைக்கால மிக முக்கிய பேசுபொருளாக ஆகியிருக்கக்கூடியதுமான ஓர் பகுதி ஆரியகுளம். பல்வேறு கட்ட புனரமைப்பு பணிகளின் பின்னர் கடந்த வியாழக்கிழமை அதாவது டிசம்பர் மாதம் 02ம் திகதி 2021ம் ஆண்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஆரிய குளம் திடலானது இப்போது இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆரியகுளம் மகிழ் திடலாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள குளமானது ஏறக்குறைய ஓர் அழுக்கடைந்த நீர்த் தேக்கமாகவே அண்மைக்காலமாக காணப்பட்டிருக்கிறது. வெறுமனே குப்பைகள், அழுக்குகள் சேகரிக்கப்பட்ட ஓர் நீர் குப்பையாக காணப்பட்ட இக்குளமானது இப்போது கண்கவர் மகிழ் திடலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமைக்கு யாழ் மாநகர சபை ஓர் மிக முக்கிய காரணம்.

அதாவது இந்த ஆரிய குளத்தின் வரலாற்றுப் பின்னணி என்ன? இந்த பகுதிக்கு உருத்துக் கோரும் அருகதை யாருக்கு உள்ளது? என்பது போன்ற பல கேள்விகளை குறித்த அபிவிருத்தி திட்டம் ஏற்படுத்தியுள்ளது. இவை குறித்த பல காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவற்றுக்கான ஓர் காத்திரமான பதிலாக பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரை அமைகின்றமை வெட்ட வெளிச்சம்.

#Ariyakulam #SriLankaNews #historicalPlace #Karuvulam

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version