காணொலிகள்

இன்று உலக விலங்குகள் தினம்

Published

on

(முழுமையான தகவல்களுக்கு காணொலி இணைக்கப்பட்டுள்ளது)

ஒக்டோபர் 4 உலக விலங்குகள் தினம்.

விலங்குகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவற்றின் நலன்களை பேணவும் விலங்கு உரிமைகளை மதிக்கவும் ஒரு விழிப்புணர்வு செயற்பாடாக உலகளாவிய ரீதியில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

சூழலின் நிலைத்தலுக்கு விலங்குகள் மிக முக்கியமான பங்காளிகளாகும்.மிகச் சிறிய ஒரு கல உயிரியான அமீபா முதல் பிரம்மாண்டமான நீலத் திமிங்கலம் வரை இந்த பூமியின் நிலவுகைக்கு தம்மாலான பங்களிப்பை இவை வழங்குகின்றன. சங்கிலித் தொடராக தமக்குள் பின்னிப் பிணைந்தவை. ஏதாவது ஒரு விலங்கு பாதிக்கப்படும் போது அதாவது அழிவடையும் போது அந்த சங்கிலிப் பிணைப்பு அறுகிறது. சூழலின் சமனிலை குலையத் தொடங்குகிறது.

இதேவேளை இன்று உலக குடியிருப்பு நாளும் அனுஷ்டிக்கப் படுகிறது.இந்த வருடம், “கார்பன் அற்ற உலகத்தை உருவாக்குவற்கான நகர்ப்புற நடவடிக்கைகளை துரிதப் படுத்தல்” ( Accelerating urban action for a carbon – free world) என்னும் தொனிப் பொருளில் இத்தினம் அனுஷ்டிக்கப் படுகிறது. உலகளாவிய நிலையில், 70 வீதமான Carbon dioxide வெளியீட்டுக்கு நகர வாழ்வும்,அது சார்பான செயற்பாடுகளுமே காரணமாக இருக்கின்றன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version