காணொலிகள்
IPL – களையிழந்த கொண்டாட்டங்கள்!!
IPL
முழு விபரங்களுக்கு – (காணொலி இணைக்கப்பட்டுள்ளது )
2007 இல் ஐபிஎல் உருவாக்கப்பெற்றபோது பெரும் மாயம் ஒன்றைக் கொண்டுவந்தது. கிரிக்கெட்டின் பார்வையாளர்கள் பெருந்திருவிழாவின் – கொண்டாட்டங்களின் பார்வையாளர்களாக மாற்றப்பட்டார்கள். மைதானத்தில் ஆடப்படும் விளையாட்டை தொலைக்காட்சியின் விளையாட்டாக மாற்றிக் கட்டமைத்தது அந்த வடிவம்.
நிலையான கமெராக்கள், அந்தரத்தில் கமெராக்கள், ஸ்டம்புகளில் கமெராக்கள் என பல இடங்களிலிருந்தும் பிடிக்கப்பட்ட படங்களைத் தொகுத்து வழங்கும் ஸ்டுடியோக்கள், உடன் தொடரும் மாநில மொழி வர்ணனைகள்இ இடையிடையே அரைகுறை ஆடையில் தாவிக்குதிக்கும் ஸியர்ஸ் லீடர் என்னும் பெண்களின் அணிவகுப்பு என ஒவ்வொன்றும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதோடு, தேசிய அடையாளத்தைப் பின்னுக்குத் தள்ளி மாநில அடையாளங்களை அணியின் பெயரோடு இணைத்துக்கொண்டது கிரிக்கெட்.
You must be logged in to post a comment Login